சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மெரி லைஃப் செயலியில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்பைப் பாராட்டியுள்ள திரு ஸ்ரீ பூபேந்தர் யாதவ், மிஷன் லைஃப்-ஐ ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தல்
Posted On:
04 JUN 2023 7:02PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற டிரேஷ் டு ட்ரெஷர் ஹேக்கத்தான், தர்தி கரே புகார், இளைஞர் மாநாடு மற்றும் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டிக்கான விருது வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்தார். இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய திரு யாதவ், அரசின் மெரி லைஃப் முன்முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த செயலியில் 1 கோடியே 90 லட்சம் பங்கேற்பாளர்கள், சுமார் 87 லட்சம் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளதாக கூறினார். இது சுற்றுச்சூழல் உணர்வில் ஒரு மைல்கல். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருப்பதால், வெற்றியாளர்களை மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
நுகர்வு ஒரு பெரிய சவாலாகக் கருதப்படும் நிலையில், பூமி கிரகத்தில் குறைந்த வளங்கள் மட்டுமே உள்ளன என்றும், புவி வெப்பமடைதல், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசுபாட்டைச் சமாளிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே முன்னோக்கிய வழி என்றும் தெரிவித்தார். பிரதமர் தலைமையில் தொடங்கப்பட்ட முயற்சிகள், அதாவது சர்வதேச சோலார் கூட்டணி, பேரிடர் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்றவை, இந்தியா அதன் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பல பங்களிப்பு இலக்குகளை முன்கூட்டியே அடைய வழிவகுத்தது என்றார் அவர். சுற்றுச்சூழல் உணர்வு என்பது ஒவ்வொரு நபரின் பொறுப்பாகும், அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற மிஷன் லைஃப் இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
***
SM/PKV/DL
(Release ID: 1929782)
Visitor Counter : 203