பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நல்லாட்சிக்கான தேசிய மையம்(NCGG) வங்காளதேசத்தின் 60வது தொகுதி அரசு ஊழியர்களின் பயிற்சியை முடித்துள்ளது; இதுவரை, வங்கதேசத்தைச் சேர்ந்த 2,145 அதிகாரிகள் என்சிஜிஜியில் பயிற்சி பெற்றுள்ளனர்
प्रविष्टि तिथि:
03 JUN 2023 11:54AM by PIB Chennai
நல்லாட்சிக்கான தேசிய மைய பொது இயக்குநர் திரு பாரத் லால், மக்களின் தேவைகளை உணர்ந்து பதிலளிக்கும் வகையில் செயல்படும் அரசு ஊழியர்களின் பங்கை வலியுறுத்தினார்.
'ஆசிய நூற்றாண்டு' தெற்காசியாவிற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நல்லாட்சிக்கான தேசிய மைய பொது இயக்குநர் கூறினார்.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) முன்னாள் மாணவர்களாக தங்கள் அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்ள அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி) வெளியுறவு அமைச்சகத்துடன் (எம்இஏ) இணைந்து ஏற்பாடு செய்த பங்களாதேஷின் அரசு ஊழியர்களுக்கான 2 வார 60வது திறன் மேம்பாட்டுத் திட்டம் (சிபிபி) ஜூன் 2, 2023 அன்று நிறைவடைந்தது. 1,500 அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 1,800 அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷ் அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG)கையெழுத்திட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மையம் ஏற்கனவே பங்களாதேஷின் அதிகாரிகள் 517 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது .
21 ஆம் நூற்றாண்டு 'ஆசிய நூற்றாண்டு' என்று அழைக்கப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளுக்கு தங்களை வளர்ந்த நாடுகளாக மாற்றிக் கொள்ளவும், அவர்களின் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாய்ப்பளிக்கிறது. இந்த இலக்கை அடைய, பரஸ்பர கற்றலை வளர்ப்பது மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுக் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தைக்கைகொண்ட நல்லாட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கிய அம்சமாகும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது மற்ற வளரும் நாடுகளுக்கு அவர்களின் அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வலுப்படுத்தும் முயற்சியில் உதவுகிறது. இந்தப் பணியைத் தொடர, வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) நல்லாட்சிக்கான தேசிய மையத்தை (NCGG) 'கவனம் செலுத்தும் நிறுவனமாக' அடையாளம் கண்டுள்ளது. இதன் விளைவாக, இம்மையத்தின் செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்துவதோடு அளவிடுகிறது.
பயிற்சி பெற்ற வங்காளதேச அரசு ஊழியர்களுக்கான பாராட்டுக்கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பொது இயக்குநர் திரு பாரத் லால் தலைமையில் நடைபெற்றது. அவரது உரையில், இந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வாறு அறிவுப் பரிமாற்றம் மற்றும் புதுமையான நடைமுறைகளை எளிதாக்கும் முதன்மை நோக்கத்துடன் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார். சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றத்தின் மூலம், உலகளவில் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
சமூகத்தில் அரசு ஊழியர்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்தும் அவர் பேசினார். மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலமும், பயனுள்ள சிக்கலைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும், அரசு ஊழியர்கள் பொதுமக்களின் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் மற்றும் நிர்வாக அமைப்பில் நம்பிக்கையை வளர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
உலகளாவிய தெற்கில் சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, பெண்களைச் சேர்ப்பதற்கும் அதிகாரமளித்தலுக்கும் முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும். உயர்தர பொதுச் சேவைகளை உறுதி செய்வதன் மூலமும், சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலமும், பெண்கள் பணியிடத்தில் தீவிரமாக பங்கேற்கலாம் மற்றும் அர்த்தமுள்ள பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம், இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்தலாம் என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், காம்பியா, மாலத்தீவு, இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூட்டான், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 15 நாடுகளின் அரசு ஊழியர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் பயிற்சி அளித்துள்ளது.
***
LG/JL/SG/DL
(रिलीज़ आईडी: 1929622)
आगंतुक पटल : 238