மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023-ஐ மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

Posted On: 02 JUN 2023 4:24PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023-ஐ இன்று வெளியிட்டார். பல்கலைக்கழக மானியக்குழுத்தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பல தரமான நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் உருவாகவும், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023 உதவும் என குறிப்பிட்டார். வழிக்காட்டுதல்கள் எளிதாக்கப்பட்டதன் மூலம் பல்கலைக்கழகங்கள் தங்களது தரத்தில் கவனம் செலுத்தவும், ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்தவும் முடியும் என கூறினார். இது  நமது உயர்கல்வியை மேம்படுத்துவதோடு, நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் கூறினார். உரிய நேரத்தில் இந்த சீர்திருத்தத்தை கொண்டுவந்ததற்காக  பல்கலைக்கழக மானியக்குழுவை அவர் பாராட்டினார்.

தேசியக் கல்விக்கொள்கை 2020 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விதிகளை மறுஆய்வு செய்யவும், திருத்தம் செய்யவும், பல்கலைக்கழக மானியக்குழு நிபுணர் குழுவை அமைத்தது.

இறுதி வரைவு விதிகளை மத்திய உயர்கல்வித்துறைக்கு அனுப்புவதற்குமுன்  நிபுணர் குழுவினரின் வழிக்காட்டுதல், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • இந்த விதிகள் தேசியக்கல்விக்கொள்கை 2020வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு என்ஏஏசி “ஏ” தரத்துடன் 3.01 சிஜிபிஏ பெற்றிருக்கவேண்டும் அல்லது  என்ஐஆர்ஃஎப்-என் சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.
  • கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரர்களின் உரிய ஆவணங்களையும், வசதிகளையும் நிபுணர் குழு இணையவழியில் ஆய்வு செய்யும். இந்த புதிய விதிகள், தரத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
  • என்ஏஏசி “ஏ” தரத்தைவிட, குறைந்த மதிப்பை பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இடம்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி நிபுணர் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். குறைகளை நிவர்த்தி செய்யாதபட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற யுஜிசி பரிந்துரைக்கும்.
  • கட்டணம், அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1929377   

***

SM/CR/RS/GK



(Release ID: 1929461) Visitor Counter : 215