வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஸ்டார்ட் –அப் நிறுவனம் 2022 விருது பெறும் வெற்றியாளர்கள் மற்றும் இறுதித்தேர்வர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி

Posted On: 02 JUN 2023 12:14PM by PIB Chennai

2023, ஜனவரி 16ம் தேதியை, தேசிய ஸ்டார்ட் –அப் தினமாக மத்திய வணிகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சகர் திரு பியூஷ் கோயல்  அறிவித்ததைத் தொடர்ந்து, தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022-க்கான வெற்றியாளர்கள் மற்றும் இறுதித்தேர்வர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங்கா மே 2ம்தேதி தொடங்கிவைத்தார்.

இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியில், இணைதளம் வழியாகவும், நேரடியாகவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளுக்கு தேர்வானவர்களின் வளர்ச்சியை மேலும் எளிதாக்கும் வகையிலும், அவர்கள் பல்வேறு சவால்களை சமாளிக்க உதவிபுரியும் வகையிலும், பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பற்றிய கற்றலை அதிகப்படுத்தவும், தொடர்புகளை வளர்க்கவும், நுகர்வோர்களை அதிகளவில் சென்றடையவும், உதவிபுரிவதை நோக்கமாகக்கொண்டது.

2021-ம் ஆண்டு தேசிய ஸ்டார்ட்-அப் விருதுகளின்போது நடத்தப்பட்ட வழிகாட்டு நிகழ்ச்சியில், 30-க்கும் மேற்பட்ட அமர்வுகள் மூலம்  வெற்றியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் துபாய் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றன.

தேசிய ஸ்டார்ட் –அப் விருதுகள் என்பது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறந்து விளங்கும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  தேசிய ஸ்டார்ட் –அப் விருதுகள் 2022-க்காக 17 துறைகளைச் சேர்ந்த 41 தேசிய ஸ்டார்ட் –அப்  நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929267

***

SM/CR/RS/GK



(Release ID: 1929432) Visitor Counter : 110