மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணைய உறுப்பினராக திரு பித்யுத் பிஹாரி ஸ்வைன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

प्रविष्टि तिथि: 01 JUN 2023 3:13PM by PIB Chennai

மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணைய உறுப்பினராக திரு பித்யுத் பிஹாரி ஸ்வைன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு யுபிஎஸ்சி தலைவர்  டாக்டர் மனோஜ் சோனி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திரு பித்யுத் பிஹாரி ஸ்வைன் 1988-ஆம் ஆண்டு குஜராத் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.  1989-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை திரு ஸ்வைன், குஜராத் அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார்.  அவற்றில் குஜராத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆரம்பக் கல்விச் செயலாளர், தொழில்துறை ஆணையர், குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குஜராத் அரசு தேர்தல் ஆணைய அதிகாரி உள்ளிட்டவை முக்கியமானவையாகும். கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சக செயலாளராக பொறுப்பேற்ற அவர், 2023 மே மாதம் வரை அப்பொறுப்பை வகித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் அவர் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1928979

------

AP/IR/KPG/GK


(रिलीज़ आईडी: 1929082) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati