வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஸ்வநிதி திட்டம் தெரு வியாபாரிகளிடையே தொழில்முனைவு மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதாக மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ்.பூரி பெருமிதம்

Posted On: 01 JUN 2023 2:28PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் எஸ். பூரி, தெரு வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டமான பிரதமர் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் வெற்றிகரமாகக் கடந்ததைப் பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் நகரங்களில், தெரு வியாபாரிகளுக்கு கண்ணியத்தையும் நிலைத்தன்மையையும்  பிரதமர் ஸ்வநிதி திட்டம் அளித்துள்ளதாக  அவர் கூறினார்.

தெருவோர வியாபாரிகளிடையே, சுய வேலைவாய்ப்பு, சுய-வாழ்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்கும் நோக்கில்  2020 ஜூன் 01-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், மத்திய அரசின் மிக வேகமாக வளர்ந்து வரும் குறு கடன் திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பிரதமர் தெரு வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டத்தின் 3 ஆண்டு பயணத்தை கொண்டாடும் வகையில் விஞ்ஞான் பவனில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்தத் திட்டம் கொரோனா தொற்றின்போது பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர வைத்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

 

இந்நிகழ்வின் போது, பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட சாதனைகளைக் கூறும் புத்தகம் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தகவலை இந்தப் புத்தகம் வழங்குகிறது.

மேலும், தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் ஸ்வநிதி மொபைல் செயலியை அமைச்சர் திரு.ஹர்தீப் எஸ்.பூரி தொடங்கி வைத்தார். கடன் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கவும், திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கவும் இந்த செயலி உதவுகிறது.

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1928966

***

AD/CR/GK


(Release ID: 1929076) Visitor Counter : 340