எரிசக்தி அமைச்சகம்
சுபன்சிரி லோயர் புனல் மின் திட்டத்தின் (2000 மெகாவாட்) கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் ஆய்வு செய்தார்
Posted On:
31 MAY 2023 2:46PM by PIB Chennai
தேசிய புனல் மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அருணாச்சலப் பிரதேசம்/அஸ்ஸாமில் அமைந்துள்ள சுபன்சிரி லோயர் புனல் மின் திட்டத்தின் (2000 மெகாவாட்) முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் கூட்டத்திற்கு புதுதில்லியில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமை வகித்தார்.
கட்டுமான முன்னேற்றம், திட்டம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், வரவிருக்கும் பருவமழை காலத்தைத் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய தயார்நிலைகளை ஆய்வு செய்தார். பல்வேறு பணித் தொகுப்புகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை, பாதுகாப்புக் கருத்தாய்வுகள், அடுத்தடுத்த பருவமழை மாதங்களைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பத் தரங்களின்படி அதன் தயார்நிலை ஆகியவற்றை மின்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பணி முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்ததோடு, தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் உத்தரவிட்டார். இத்திட்டத்தில், நிறுவனம் 250 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி, 2024 இல் செயல்படுத்த முயற்சிப்பதாக என்எச்பிசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உறுதியளித்தார்.
******
AP/PKV/KRS
(Release ID: 1928734)
Visitor Counter : 160