எரிசக்தி அமைச்சகம்
தேசிய நீர்மின் வாரியத்தின்(NHPC) வரிக்குப் பிந்தைய லாபம் (பிஏடி) 8% அதிகரித்துள்ளது; தி பவர் 'மினி ரத்னா' 2022-23 நிதியாண்டில் ரூ.3834 கோடி பிஏடி என தெரிவித்துள்ளது
Posted On:
30 MAY 2023 4:48PM by PIB Chennai
இந்தியாவின் முதன்மையான தேசிய நீர்மின் வாரியம் (NHPC) லிமிடெட் மற்றும் இந்திய அரசின் 'மினி ரத்னா' வகை-I நிறுவனமானது 2022-23 நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அதன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுடன் அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ. 3538 கோடியாக இருந்த நிலையில் 2022-23 நிதியாண்டில் முழுமையான அடிப்படையில் ரூ.3834 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 8% அதிகமாகும். 2022-23 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிகர லாபம் 2021-22 இல் ரூ 3524 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ 3890 ஆக இருந்தது. இதன் மூலம் 10% அதிகரித்துள்ளது. தேசிய நீர்மின் வாரியத்தின் (NHPC) மின் நிலையங்கள் 2022-23 நிதியாண்டில் 24907 மில்லியன் யூனிட்களை (MUs) உற்பத்தி செய்தன.
2022-23 நிதியாண்டிற்கான ஒரு பங்குக்கு ரூ. 1.40 இடைக்கால ஈவுத்தொகையுடன் சேர்த்து ஒரு பங்கிற்கு ரூ.0.45 இறுதி ஈவுத்தொகையை இயக்குநர்கள் குழு பரிந்துரைத்தது. அதன்படி, 2022-23 நிதியாண்டிற்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்கிற்கு ரூ.1.85 ஆகும்.
தேசிய நீர்மின் வாரியம் NHPC தற்போது 25 மின் நிலையங்களில் இருந்து 7097.2 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. தற்போது 10489 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட 16 திட்டங்களின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது. இது 5882 மெகாவாட் மொத்த திறன் கொண்ட 12 திட்டங்களை அனுமதி நிலையிலும், 890 மெகாவாட் மொத்த திறன் கொண்ட 2 திட்டங்களை ஆய்வு மற்றும் விசாரணை நிலையிலும் கொண்டுள்ளது.
Release ID: 1928316
******
AP/JL/KRS
(Release ID: 1928406)
Visitor Counter : 146