அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங் 2022-2023க்கான சோலார் டெகத்லான் இந்தியா டிசைன் சேலஞ்ச் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

Posted On: 28 MAY 2023 3:04PM by PIB Chennai

மைசூருவில் உள்ள இன்ஃபோசிஸ் வளாகத்தில் நடத்தப்பட்ட நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங்கிற்கான சோலார் டெகத்லான் இந்தியா வடிவமைப்பு  சவாலின் 3வது போட்டியில் மொத்தம் 12 அணிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்றன. தங்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்த ஆறு அணிகள், மனை வணிகம்  மற்றும் ஊடகப் பிரபலங்களைக் கொண்ட கிராண்ட் ஜூரிக்குத் தங்கள் தீர்வுகளை வழங்கினர், மேலும் நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் வி குழு, மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் முதலீட்டுத் தகுதியுள்ள வடிவமைப்பிற்கான சிறந்த பரிசை வென்றது. 650 க்கும் அதிகமானோர் பங்கேற்ற  இறுதிப் போட்டியில் உண்மையான 36 கட்டிடத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மே 28 அன்று, சோலார் டெகத்லான் இந்தியா இன்டர்ன்ஷிப் இந்தக் கண்காட்சியை நடத்தியது. இதில் பருவநிலை மாற்றம் மற்றும் நிகர பூஜ்ஜிய கட்டிடங்கள் கட்டுமானத்தில்  பணிபுரியும் முன்னணி நிறுவனங்கள் சிறந்த மற்றும் பிரகாசமான சிந்தனையாளர்களைத் தேடின.

விருதுகளை அறிவித்து, சோலார் டெகாத்லான் இந்தியாவின் இயக்குனர் பிரசாத் வைத்யா பேசுகையில், “இந்தியாவில் உள்ள சிறந்த தொழில்முறை வடிவமைப்புக் குழுக்களின் பணிகளுக்கு இணையான நிகர-பூஜ்ஜிய கட்டிட வடிவமைப்புகளை இந்த மாணவர் குழுக்கள் சில உருவாக்கியுள்ளன. 9 மாதங்களுக்குள், இந்த மாணவர்கள் மிகவும் சிறப்பான கற்றல் திறனை அளவிட முடியும். மாணவர்கள் இதைச் சிறப்பாகச் செய்ய முடிந்தால், கட்டிட உரிமையாளர்களும் மேம்படுத்துவோரும் தாங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு கட்டிடத் திட்டத்திலும் இத்தகைய  தரமான வேலையைக் கோரத் தொடங்கும் காலமாக இது இருக்கும்" என்றார்.

இந்த ஆண்டுக்கான  போட்டி  ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூகத் தொழில்முனைவோர் அனிஷ் மல்பானி முன்னிலையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர் முக்கிய உரையையும் நிகழ்த்தினார்.

***

AD/SMB/DL



(Release ID: 1927890) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi , Marathi