வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம்

Posted On: 28 MAY 2023 10:51AM by PIB Chennai

முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இக்கூட்டத்தில்  பங்கேற்றார்.

டோக்கியோவில், அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற கூட்டாளர் நாடுகளால் ஐபிஇஎப் கடந்த ஆண்டு மே 23 அன்று கூட்டாக தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய  14  நாடுகளை ஐபிஇஎப் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் கூட்டாளர் நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த முயல்கிறது.

இந்த அமைச்சர்கள் கூட்டத்தில், விநியோக சங்கிலியின் (தூண்-II) கீழ் பேச்சுவார்த்தைகள் பெருமளவு  முடிவடைந்தன; மற்ற மூன்று தூண்களின் கீழ் நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

இதில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், வணிக தொடர்ச்சியை சிறப்பாக உறுதி செய்வதற்கும், தளவாடங்கள் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இடையூறுகளைத் தணிப்பதற்கான ஒத்துழைப்பு, முக்கியமான துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் முக்கியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் மதிப்பு சங்கிலிகளை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

குறைந்த செலவில் நீண்ட கால பருவநிலை நிதி திரட்டுதல் மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட அணுகல் போன்ற செயல் சார்ந்த கூறுகளை மையமாகக் கொண்டு கவனம் செலுத்துவதை இந்தியா விரும்புகிறது என்று அவர் கூறினார்.

 ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்காக இந்தியாவின் சட்டம் மற்றும் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியா எடுத்துள்ள வலுவான நடவடிக்கைகளை அமைச்சர் விளக்கினார்.

***

AD/PKV/DL



(Release ID: 1927859) Visitor Counter : 159