பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஹைதராபாத்தில் உள்ள தொழில்துறையினருடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அதன் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு கொள்கிறது

Posted On: 28 MAY 2023 11:31AM by PIB Chennai

இந்தியாவை நிகர பாதுகாப்பு ஏற்றுமதியாளராக மாற்றுவதற்கான அனைத்து ஆதரவையும் உறுதி செய்கிறது

 

மே 27, 2023 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் இமரத்தில் (RCI) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒரு நாள் முழுவதும் தொழில் தொடர்பு மற்றும் சிந்தனை அமர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இது சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் (MSME) & ஸ்டார்ட்-அப்கள் உட்பட அனைத்து பாதுகாப்புத் தொழில்களையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.  பல்வேறு தொழில்துறை நட்பு முயற்சிகள் மற்றும் டிஆர்டிஓவின் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தளத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

 

பாதுகாப்புத் துறையின் செயலாளர்,  மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் அவர்கள் சிந்தனை அமர்வுக்கு தலைமை தாங்கினார். டிஆர்டிஓ, அவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும், இந்தியாவை நிகர பாதுகாப்பு ஏற்றுமதியாளராக மாற்றுவதற்கு அவர்களின் திறன்களை வளர்ப்பதில் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் தொழில்துறைக்கு உறுதியளித்தார். டிஆர்டிஓ தலைவர், இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையை முழு தன்னம்பிக்கை அடைய இந்த நிகழ்வுகள் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை வழங்குவதால், இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

 தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை இயக்குநரக (DIITM) இயக்குனர், ஸ்ரீ அருண் சௌத்ரி, இந்திய தொழில்களுக்கு ஆதரவளிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(DRDO) பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகள் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கினார். டிஆர்டிஓ மூலம் தொழில்துறைக்கு தொழில்நுட்பத்தை மாற்றும் செயல்முறையை அவர் விளக்கினார். கொள்கையின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தினார். வளர்ச்சி மற்றும் உற்பத்தி பங்காளிகளாக தொழில்களை தேர்ந்தெடுப்பதன் அவசியம் மற்றும் செயல்முறையையும் அவர் விளக்கினார். தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டத்தின் சிறப்பம்சங்கள் தொழில்துறையினருக்குப் பொருத்தமாக விளக்கப்பட்டுள்ளன. டிஆர்டிஓ கொள்கை மற்றும் அதன் உள்கட்டமைப்பு சோதனை வசதி மற்றும் டிஆர்டிஓ காப்புரிமைகளை இந்திய தொழில்துறையின் பயன்பாடு குறித்த விவரங்களையும் அவர் வழங்கினார்.

 

டிஆர்டிஓ, இந்திய தர கவுன்சில் (க்யூசிஐ) உடன் இணைந்து, 'சிஸ்டம் ஃபார் அட்வான்ஸ்டு மேனுஃபேக்ச்சரிங் அசெஸ்மென்ட் அண்ட் ரேங்கிங் (சமர்)' சான்றிதழை உருவாக்கியுள்ளது, இது சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்(MSME) உட்பட பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் முதிர்ச்சியை அளவிடுவதற்கான அளவுகோலாகும். நிகழ்வின் போது, ​​ஜியோ-டேக்கிங் மற்றும் டைம் ஸ்டாம்பிங் மூலம் மதிப்பீட்டிற்கான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆன்லைன் மாதிரிக்கான சமர் (SAMAR) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) பற்றிய கண்ணோட்டம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(DRDO) மானிய விலையில் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு சமர் வழங்குகிறது.

 

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்(MSME) மற்றும் பெரிய நிறுவனங்களின் தொழில் பங்குதாரர்கள் மற்றும் தொடக்க தொழில்முனைவோர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன்(DRDO) பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிய விளக்கங்களை வழங்கினர். அவர்கள் தற்போதைய நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்த மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர். வணிகத்தை எளிதாக செய்வதற்கான வழிகளை பரிந்துரைத்தனர்.

***

AD/CJL/DL



(Release ID: 1927851) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi , Telugu