குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சிரமத்தை உணர்ந்து செயல்படுங்கள் - மாநில அரசுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் கோரிக்கை
प्रविष्टि तिथि:
24 MAY 2023 2:43PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் அனைத்து மாநில அரசுகளுக்கும், குறிப்பாக எல்லையிலுள்ள மாநில அரசுகள், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சிரமத்தை உணர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் சிக்கலான எல்லைகளைக் காப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பெரும் சவால்களை எதிர்கொள்வதைக் குறிப்பிட்ட அவர், அனைத்து மாநிலங்களும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது அவர்களின் மன உறுதி அதிகமாக இருக்கும் எனக் கூறினார்.
புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் 35 பிஎஸ்எஃப் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு பிஎஸ்எஃப் வீரரும் அர்ப்பணிப்பு மற்றும் தேச பக்தியை பிரதிபலிப்பதாகக் கூறினார். பிஎஸ்எஃப் வீரர்களின் தளராத மனப்பான்மையை பாராட்டிய அவர், தார் பாலைவனம், பனி மூடிய மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்கள் போன்ற கடினமான புவியியல் சூழ்நிலைகளிலும் அவர்கள் இந்தியாவின் எல்லைகளை தயங்காமல் பாதுகாப்பதாக கூறினார். பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் தங்கள் மன உறுதியை தளர விடாத பிஎஸ்எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் படையை நிறுவிய ருஸ்தம்ஜியைப் பாராட்டிய அவர், இந்தியாவில் பொது நல வழக்குகளுக்கு அவர் உறுதியான அடித்தளம் அமைத்ததைச் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் முதல் பொது நல வழக்கில், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் சிறைகள் அடைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் விசாரணைக் கைதிகளை விடுவிக்க அவர் வழிவகுத்ததாக குடியரசு துணைத் தலைவர் கூறினார். ருஸ்தம்ஜி அமைதியாக உட்கார்ந்திருந்தால், அந்த மக்கள் தொடர்ந்து சிறையில் வாடியிருப்பார்கள் எனவும், ஆனால் அவர் முயற்சி செய்து வெற்றி பெற்றதாகவும், குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் கூறினார்.
(Release ID: 1926879)
SM/CR/KRS
******
(रिलीज़ आईडी: 1927021)
आगंतुक पटल : 169