மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குடிமைப் பணி இறுதித் தேர்வு முடிவுகள், 2022 - இடஒதுக்கீடு விவரங்கள்

Posted On: 23 MAY 2023 2:31PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடத்திய எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு 2023,  ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களை கீழ்கண்ட பணிகளுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

1) இந்திய ஆட்சிப் பணி

2) இந்திய வெளியுறவுப் பணி

3) இந்திய காவல் பணி மற்றும்

4) மத்தியப் பணிகள்,  குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ மொத்தம் 933 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொதுப்பிரிவினர் 345 பேர், இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெறாத  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 99 பேர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 263 பேர். ஷெட்யூல்டு வகுப்பினர் 154 பேர், ஷெட்யூல்டு பழங்குடியினர் 72 பேர்.

இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேரும், இந்திய வெளியுறவுப் பணிக்கு 38 பேரும் இந்திய காவல் பணிக்கு 200 பேரும், மத்திய அரசின் குரூப் ‘ஏ’ பணிக்கு 473 பேரும், குரூப் ‘பி’ பணிக்கு 131 பேரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

                                ------- 

AP/IR/KPG/KRS


(Release ID: 1926702) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Marathi , Hindi