பாதுகாப்பு அமைச்சகம்

மலேசியாவில் நடைபெறும் லங்காவி சர்வதேச கடற்சார் மற்றும் விண்வெளிக் கண்காட்சி 2023-ல் (பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் பிரிவின்) கூடுதல் செயலாளர் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது

Posted On: 23 MAY 2023 3:08PM by PIB Chennai

2023 மே 22 முதல் 25 வரை மலேசியாவில் நடைபெறும் 16-வது லங்காவி சர்வதேச கடற்சார் மற்றும் விண்வெளிக் கண்காட்சி (லிமா 23) யில் (பாதுகாப்பு தளவாட உற்பத்தி பிரிவின்) கூடுதல் செயலாளர் திரு டி. நடராஜன் தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றுள்ளது.  இந்தக் கண்காட்சிக்கிடையே மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ செரி முகமது ஹசனை (பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் பிரிவின்) கூடுதல் செயலாளர் சந்தித்தார்.

1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இரண்டாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் லிமா,  ஆசிய- பசிஃபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்சார் மற்றும்  விண்வெளிக் கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டுக் கண்காட்சியில் இந்தியா உட்பட 30-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

 

******

AP/SMB/RS/KRS

(Release ID: 1926648)

 



(Release ID: 1926674) Visitor Counter : 159