நித்தி ஆயோக்
G20-யின் ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு முதல் வரைவு கொள்கை அறிக்கையை வெளியிட்டது
Posted On:
22 MAY 2023 5:32PM by PIB Chennai
இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் உள்ள ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு அதன் கொள்கை அறிக்கையின் முக்கிய பரிந்துரை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களின் முதல் வரைவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட்அப்20 தலைவரான டாக்டர். சிந்தன் வைஷ்ணவ், உலக நாடுகள் தங்களது நாடுகளின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வரைவு ஆவணத்தின் மீது கருத்துக்களை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்வமுள்ளவர்கள் ஸ்டார்ட்அப்20-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவுக் கொள்கை அறிக்கையைக் காணலாம். https://www.startup20india2023.org. என்ற இணைப்பில் இந்த ஆவணம் பொதுப்பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல் கல்லை எட்டுவதற்கு உழைத்த குழுவினரின் முயற்சிகளுக்கு டாக்டர் சிந்தன் நன்றி தெரிவித்தார். உலக அளவில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை நேரடியாகப் பாதிக்கும் கொள்கைகளை வடிவமைப்பதில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
2023 மே 27-ம் தேதி வரை இந்த வரைவுக் கொள்கை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இந்த கொள்கை அறிக்கையின் இறுதிப் பதிப்பு, உலகம் முழுவதிலும் இருந்து வந்த மதிப்புமிக்க உள்ளீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு:
ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு என்பது ஜி-20 கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு பிரத்யேக தளமாகும். இது உரையாடலை எளிதாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு, உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த முயற்சிக்கிறது.
தொடர்பு:
சுமையா யூசுப்
அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக்
எண்:9319364112
(Release ID :1926369)
******
AD/CR/KRS
(Release ID: 1926451)