ஆயுஷ்
ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் 2023-ன் கொண்டாட்டத்தை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடங்கியது
Posted On:
22 MAY 2023 7:18PM by PIB Chennai
ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் 2023-ன் கொண்டாட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடங்கியது. புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில், மும்பையில் உள்ள யோகா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹன்சா யோகேந்திரா தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
லே மற்றும் தில்லியில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தொடர் விரைவுரைகள், பயிலரங்கு, சுவரொட்டிப் போட்டி, ஆசனப்போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. இதன் மூலம் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு யோகா குறித்து ஆழமான புரிதல் ஏற்பட்டு, நமது அன்றாட வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள முடியும்.
******
AD/IR/RS/KRS
(Release ID: 1926445)
Visitor Counter : 210