சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஜி- 20 இன் மூன்றாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு (ECSWG) கூட்டம் மும்பையில் மே 21-23 வரை நடைபெறவுள்ளது
Posted On:
20 MAY 2023 4:32PM by PIB Chennai
இந்தியாவின் தலைமையில் ஜி- 20, 3வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) கூட்டம் மும்பையில் மே 21-23, 2023 வரை நடைபெறும். இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், தகவல்தொடர்பு பற்றிய விவாதங்களை மேலும் பயனளிக்கக்கூடிய அணுகுமுறையுடன் வழிநடத்துவதாகும்.
மூன்று நாள் நிகழ்வு மும்பையின் ஜூஹுவில் உள்ள கடற்கரை சுத்தம்செய்தல் பக்க நிகழ்வோடு தொடங்கும். அதைத் தொடர்ந்து, 'ஓஷன் 20 டயலாக்' நடைபெறும். கடற்கரை தூய்மைப்படுத்தல் என்பது நமது கடற்கரைகள் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் சமூகப் பங்கேற்பினைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் குடிமக்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இந்தோனேசியா தலைமையின் போது தொடங்கப்பட்ட 'ஓஷன் 20' இயங்குதளம், கடல் தீர்வுகளுக்கான யோசனை மற்றும் செயலை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், முன்முயற்சியை கட்டியெழுப்புவதற்கும் நீலப் பொருளாதாரத்தின் மூன்று குறிப்பிடத்தக்க தூண்களில் கவனம் செலுத்தும் மூன்றாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவில் (ECSWG) 'ஓஷன்20' உரையாடலை தொகுத்து வழங்குவதன் மூலம் இந்தியாவின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டு பக்க நிகழ்வுகளும் ஒரு நிலையான மற்றும் பருவநிலையை எதிர்கொள்ளும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கூட்டத்தின் முதல் நாள் அமர்வுகள் நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அன்றைய முதல் அமர்வு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கண்டுபிடிப்புகள் பற்றியதாக இருக்கும். நீலப் பொருளாதாரத்திற்கான நீல நிதிப் பொறிமுறைகளை நிறுவுவதற்கான இறுதி அமர்வுடன் கொள்கை, நிர்வாகம் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றில் அடுத்த அமர்வு அமையும். அமர்வுகள் குழு விவாதம் மற்றும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெருங்கடல்களின் நன்மையை நோக்கிச் செயல்படுவதையும், அவற்றிற்கு ஏற்படும் சேதத்தை மாற்றியமைக்கவும் நமது கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
3 நாள் கூட்டத்தின் அடுத்த இரண்டு நாட்களில், ஜி 20 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை அடைவதற்கான ஆலோசனைகளுடன், வரைவு அறிக்கை பற்றிய விவாதங்களும் நடைபெறும். நான்காவது கூட்டத்திற்கான குறிப்புகளுடன் இந்தக் கூட்டங்கள் முடிவடையும்.
ஜி 20 தலைமையின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குழு (ECSWG) ஜி 20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கடல்களின் நிலையான மேலாண்மை மற்றும் கடல் பல்லுயிர் பாதுகாப்புக்கான நவீன தீர்வுகளை உருவாக்குகிறது. ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை என்பது கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
மூன்றாவது கூட்டம், ஜி20 நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் முயற்சிகளை நிலையான மற்றும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஒவ்வொரு முன்னுரிமைப் பகுதிகளின் கீழும் விளைவுகளைச் செயல்படுத்துவதற்கும் அனைவருக்கும் நிலையான மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை அடைவதற்கும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.
***
AD/CJL/DL
(Release ID: 1925909)
Visitor Counter : 160