அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய மெட்ரிக் அளவீடு, புவியிலிருந்து தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட சூரியனின் படத்தின் தரத்தை அளவிட உதவும்
Posted On:
20 MAY 2023 4:48PM by PIB Chennai
நமது நெருங்கிய நட்சத்திரமான சூரியனை எவ்வளவு தூரம் உற்றுப் பார்த்திருக்கிறோம்? விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்ட ஒரு புதிய மெட்ரிக், பூமியிலிருந்து தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட சூரியனின் படத்தின் தரத்தை அளவிட உதவும்.
சூரியனின் மேற்பரப்பில் நிகழும் எரிமலைகள் மற்றும் கரோனல் ஆற்றல் உமிழ்வுகள் போன்ற மாறும் நிகழ்வுகள் சூரியன் குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ள நமது வானியலாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. சூரியன் மிக நெருக்கமான நட்சத்திரமாக இருப்பதால் அதை விரிவாக ஆய்வு செய்யலாம். சூரியனைப் பற்றிய புரிதல் இதனால் விரிவடையும். மிகச்சிறிய அம்சங்களைக் கூட விரிவாகத் தெரிந்து கொள்வதற்கான பெரிய தொலைநோக்கிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, மெராக்கில் உள்ள 2 மீ தேசிய பெரிய சூரிய தொலைநோக்கி (NLST) ஆகும். இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் (IIA) அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொலைநோக்கிகள் தரையில் இருக்கும் போது ஒரு பெரிய குறைபாடு உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது, இது ஒரே மாதிரியான ஊடகம் அல்ல. ஒளிவிலகல் குறியீட்டு ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் சீரற்ற வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் உள்ளன.
தரை அடிப்படையிலான தொலைநோக்கிகளிலிருந்து பெறப்பட்ட படங்களின் தரத்தை ஸ்ட்ரெல் விகிதம் அல்லது இரவு நேர வானியல் தொலைநோக்கிகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் மற்ற அளவீடுகள் மூலம் அளவிட முடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், தரை அடிப்படையிலான சூரிய தொலைநோக்கிகளின் படத்தின் தரத்தை அளவிட ரூட் மீன் ஸ்கொயர் (rms) கிரானுலேஷன் கான்ட்ராஸ்ட் எனப்படும் புதிய மெட்ரிக்கைப் பயன்படுத்த முன்மொழிந்துள்ளனர். விஞ்ஞானிகள் சரஸ்வதி கல்யாணி சுப்ரமணியன் மற்றும் ஸ்ரீதரன் ரெங்கசாமி ஆகியோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியீடு இணைப்பு: https://doi.org/10.1007/s11207-022-02105-2
***
AD/CJL/DL
(Release ID: 1925906)
Visitor Counter : 163