குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் மே 21-22ம் தேதிகளில் கேரளா பயணம்

प्रविष्टि तिथि: 19 MAY 2023 5:17PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் மே 21-22ம் தேதிகளில் கேரளாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது மே 21ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள  ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.

மே 22ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கேரள சட்டப்பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்து குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் உரையாற்றுகிறார். இந்த விழாவில், கேரள சட்டமன்றத்தின் சர்வதேச புத்தகத் திருவிழா -2023ன் விழா மலரை வெளியிடுகிறார். கேரள சட்டப்பேரவைக் கட்டிடம் 1998-ம் ஆண்டு மே 22-ம் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த திரு கே ஆர் நாராயணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதைத் தொடர்ந்து, கண்ணூர் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமிக்கு செல்லும் குடியரசு துணைத்தலைவர், அங்கு கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். இதன் மூலம், இந்த கடற்படை அகாடமிக்கு பயணம் செய்யும் முதல் குடியரசு துணைத்தலைவர்  என்ற  பெருமை திரு ஜெக்தீப் தன்கருக்கு கிடைக்கிறது.

கண்ணூர் பயணத்தின் போது, தம்முடைய ஆசிரியர்  ரத்னா நாயரை தலசேரியில் உள்ள அவரது இல்லத்தில் குடியரசு துணைத்தலைவர் சந்தித்து மரியாதை செலுத்துகிறார்.

சித்தூர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் திரு ஜெக்தீப் தன்கர் படித்த காலத்தில், அவருக்கு ரத்னா நாயர் பாடம் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

******

(Release ID: 1925536)

AD/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1925603) आगंतुक पटल : 293
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी