சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
காஜியாபாத் - அலிகார் விரைவுச் சாலையில் 100 மணி நேரத்தில் 100 கிமீ தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்ததற்காக திரு.நிதின் கட்கரி பாராட்டு
Posted On:
19 MAY 2023 3:35PM by PIB Chennai
காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலை 100 மணிநேரத்தில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சாலை போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறையின் அர்ப்பணிப்பு மற்றும் புத்தி கூர்மைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. இந்த சாதனைக்காக க்யூப் ஹைவேஸ், எல்&டி, மற்றும் காசியாபாத் அலிகார் எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த குழுவினருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்காக இணைய வழியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் திரு.கட்கரி, காஜியாபாத்-அலிகார் இடையிலான 118 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை, அப்பகுதியின் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். தொழில்துறை பகுதிகள், விவசாய பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஒவ்வொரு பயணிக்கும் தரத்தில் சமரசம் செய்யாத உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் கட்கரி கூறினார்.
******
(Release ID: 1925492)
(Release ID: 1925555)
Visitor Counter : 138