சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ரூ.9000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 29.6 கிமீ நீளம் கொண்ட நாட்டின் முதல் உயர்மட்ட 8 வழி விரைவுச்சாலையின் பணியின் 2024 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி கூறினார்

Posted On: 18 MAY 2023 3:00PM by PIB Chennai

ரூ.9000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 29.6 கிமீ நீளம் கொண்ட நாட்டின் முதல் உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை 2024 ஏறக்குறைய ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்தார். ஹரியானாவில் 18.9 கிமீ நீளத்திலும், டெல்லியில் 10.1 கிமீ நீளத்திலும் ஒற்றைத் தூண்களில் விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.

டெல்லி துணைநிலை ஆளுநர் திரு.வினய் குமார் சக்சேனா, மத்திய இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோருடன் இணைந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று இந்த விரைவுச் சாலையை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு.கட்கரி, விரைவுச் சாலையின் இருபுறமும் 3 வழிச் சாலை அமைக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்த விரைவுச் சாலையில், 3.6 கிமீ நீளம் கொண்ட நாட்டின் அகலமான 8 வழிச் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்த விரைவுச்சாலையானது ஹரியானாவில் ஹர்சாருவுக்கு அருகிலுள்ள பட்டோடி சாலை  மற்றும் பசாய் அருகே ஃபரூக்நகர் (SH-15A) ஆகியவற்றுடன் இணைக்கும். இந்த முழு விரைவுச்சாலையிலும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) வசதி இருக்கும்’’ எனக் கூறினார்.

******

AD/CR/KRS



(Release ID: 1925268) Visitor Counter : 151