குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் மே 20 அன்று சண்டிகர் செல்ல உள்ளார்
प्रविष्टि तिथि:
18 MAY 2023 3:09PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் 2023, மே 20 அன்று சண்டிகர் செல்கிறார். அங்கு பஞ்சாப் மாநில பல்கலைக்கழகத்தின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இப்பயணத்தின் போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ள குடியரசுத் துணைத்தலைவர், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அத்துடன் பஞ்சாப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அலுவலகப் பணியாளர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள் சங்க உறுப்பினர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் உரையாட உள்ளார்.
அழகான நகரில் பயணம் மேற்கொள்ளும் குடியரசு துணைத்தலைவர், பஞ்சாப் ஆளுநர் மாளிகைக்கும் செல்ல உள்ளார்.
******
AD/IR/MA/KRS
(रिलीज़ आईडी: 1925235)
आगंतुक पटल : 177