வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 16 MAY 2023 12:17PM by PIB Chennai

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 10  மடங்கு அதிகரிக்கும் என்று  மத்திய தொழில், வர்த்தகம்,  நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு பியூஷ் கோயல், அங்கு நடைபெற்ற இந்தியா- ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் முதலமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். பெல்ஜியம் தொழில் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, இக்கூட்டத்தில் அவர்,  பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த 28 தொழில்துறை பிரதிநிதிகளும். இந்தியாவின் தொழில் பிரதிநிதிகள்  8 பேரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கோயல், உலகின் மிகப்பெரிய வேகமாக வளரும்  பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் வளர்ச்சித்திறன், அடுத்த 25 ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரிக்கும் என்றார். வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் திறமைகள் ஆகியவற்றில் கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வட்டமேஜை ஆலோசனையில் இந்தியா மற்றும் பெல்ஜியத்தைச்சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் முதலீடு, பாதுகாப்பு, ஜீரோ சதவீத கார்பன் உமிழ்வு தொழில்நுட்பம், பசுமை நிதி, கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய பியூஷ் கோயல், பருவமாறுபாடு உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடே முக்கியப் பங்காற்றும் என்று தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924407 

 ******

AP/ES/RS/KRS



(Release ID: 1924493) Visitor Counter : 135