சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், நீர் மற்றும் ஆற்றல் சேமிப்பு, சுகாதாரமான உப்பு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மிஷன் லைஃப் இயக்கத்தின் கருப்பொருளை உணர்த்தினர்

Posted On: 15 MAY 2023 6:39PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினக் (ஜூன் 5) கொண்டாட்டத்தை முன்னிட்டு, மிஷன்  லைஃப் இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்;

மைசூரிலுள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 12 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்காக 2023 மே 15 முதல் மே 20-ம் தேதி வரை கோடை விடுமுறை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பறவைகளை பார்க்கும் அமர்வு, பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்குப் பயணம்,  ஓரிகாமி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்;

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் மேற்கு வங்கத்திலுள்ள குல்தாலி கிராமத்தில் வெவ்வேறு வயதினரைச் சேர்ந்த சுமார் 100 பேர் சுற்றுச்சூழலைக் காப்போம் என உறுதிமொழி எடுக்க முன் வந்தனர். மற்றொரு நிகழ்வில், மிஷன் லைஃப் இயக்கம் குறித்து கிராமப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிலையான கடற்கரை மேலாண்மை தேசிய மையம்;

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு மிஷன் லைஃப் இயக்கத்தின் நோக்கம் எடுத்துரைக்கப்பட்டது. மரக்காணம் சென்னையில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, நிலையான கடற்கரை மேலாண்மை தேசிய மைய ஊழியர்கள் 25 உப்பள உரிமையாளர்கள் மற்றும் 75 தொழிலாளர்களுக்கு மிஷன் லைஃப் இயக்கத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு அளித்தனர். நீர் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, சுகாதாரமான உப்பு உற்பத்தி, பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். தற்போது உப்பு பிரித்தெடுக்கும் பணியின்போது திடீரென ஏற்படும் மழைப்பொழிவு போன்ற காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உப்பள தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் உப்பளத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சுற்றுச்சூழல், வாழ்விடம், இயற்கையோடு இணைந்து வாழ்வதன் அவசியம் குறித்து எளிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

                                                                                                                   ----

AP/CR/KPG

 


(Release ID: 1924310) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi