வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2 சதவீதம் வளர்ச்சி பெற்று 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது
Posted On:
15 MAY 2023 5:21PM by PIB Chennai
2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 7.92 சதவீதம் குறைவு ஆகும்.
• 2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2023 ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதம் உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
• சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 30 முக்கிய துறைகளில் 11 துறைகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் 2022) ஒப்பிடும்போது, 2023 ஏப்ரல் மாதத்தில் உயர்ந்துள்ளன.
• 2022 ஏப்ரலில் 1.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த எலெக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 2023 ஏப்ரலில் 26.49 சதவீதம் அதிகரித்து 2.11 பில்லியன் டாலர்களாக உள்ளது.
• சேவைகள் ஏற்றுமதி 2022 ஏப்ரலை விட 2023 ஏப்ரலில 26.24 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
******
AD/CR/KPG
(Release ID: 1924297)
Visitor Counter : 333