ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வேயில் “நிலையான குறியீடுகள்” குறித்த புத்தகத்தை திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
Posted On:
15 MAY 2023 4:31PM by PIB Chennai
நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் புதிய இந்தியாவுக்கான அடையாளத்தை இந்திய ரயில்வே ஏற்படுத்தி வருகிறது. அமிர்த பாரத் நிலையங்கள் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1275 நிலையங்களை இந்திய ரயில்வே மறுசீரமைப்பு செய்துள்ளது.
புதுதில்லி ரயில் பவனில் இந்திய ரயில்வேயில் “நிலையான குறியீடுகள்” குறித்த புத்தகத்தை திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் தலைமையின் கீழ் இந்திய ரயில்வே அயராது உழைத்து வருவது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். ரயில் நிலையங்களில் குறியீடுகள் குறித்த இந்திய ரயில்வேயில் “நிலையான குறியீடுகள்” குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் புத்தகத்தை வெளியிடுவது தனித்துவமானது என்று தெரிவித்தார். இந்திய ரயில்வே நிலையங்களில் நிலையான குறியீடுகள் புத்தகத்தை வெளியிடுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப நவீன நிலையான குறியீடுகளை இந்திய ரயில்வே உருவாக்கும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
******
AP/IR/RR/KPG
(Release ID: 1924243)
Visitor Counter : 228