புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின்கல உற்பத்தியாளர்களின் பட்டியலில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது
Posted On:
15 MAY 2023 3:38PM by PIB Chennai
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்ஆர்என்இ) சூரிய மின்கல உற்பத்தியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களின் செலவைக் குறைப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.
முக்கிய சீர்திருத்தங்களில் சில:
(1) விண்ணப்பக் கட்டணத்தில் 80% குறைப்பு.
(2) ஆய்வுக் கட்டணத்தில் கணிசமானக் குறைப்பு, சில சந்தர்ப்பங்களில் 70% வரை குறைப்பு.
(3) தொழிற்சாலை ஆய்வுக்கு முன் உற்பத்தியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற அனுமதிப்பது, விண்ணப்பக் கட்டணத்தில் 90% திரும்பப் பெறுதல்
.(4) ஏஎல்எல்எம்-இல் சேர்வதற்கான குறைந்தபட்ச தொகுதி செயல்திறன் வரம்புகள் அறிமுகம்:
- யுடிலிட்டி/ கிரிட் ஸ்கேல் பவர் பிளான்ட்ஸ்: 20.00%
- கூரை மற்றும் சோலார் உந்தி: 19.50%
- சூரிய ஒளி: 19.00%
இந்த மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை செயலாளர் திரு.பி.எஸ்.பல்லா, மின்கலன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப சூரிய மின்கலனின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனக் கூறினார்.
ஏஎல்எல்எம் இன் பின்னணி
(1) சூரிய மின்கலன்களுக்கு நீண்ட கால உத்தரவாதம் தேவைப்படுவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட அலகுகளில் மட்டும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உற்பத்தியாளரின் நம்பகத்தன்மை அவசியம்.
(2) அதன்படி, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகம் 02.01.2019 அன்று “அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மின்கல உற்பத்தியாளர்கள் (கட்டாயப் பதிவுக்கான தேவை) ஆணை, 2019”-ஐ வெளியிட்டது.
3) ஏஎல்எல்எம் பட்டியல்-I இல் சேர்க்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் மட்டுமே, அரசு திட்டங்கள்/அரசு உதவி பெறும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.
4) இன்றுவரை, ஏஎல்எல்எம் பட்டியலில் 91 உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவற்றின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 22,389 மெகாவாட் ஆகும்.
******
AP/CR/KPG
(Release ID: 1924222)