நிலக்கரி அமைச்சகம்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கனரக உபகரண உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் அறிக்கையை நிலக்கரித் துறை அமைச்சகம் ஆய்வு செய்தது
அதிகத் திறன் கொண்ட உபகரணத்தை இறக்குமதி செய்வதை குறைக்க நடவடிக்கை
Posted On:
15 MAY 2023 1:32PM by PIB Chennai
இந்தியாவில் அதிகத் திறன் கொண்ட சுரங்க உபகரணத்தின் இறக்குமதியை மேலும் குறைத்து உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிலக்கரி சுரங்கத் துறையில் உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நிலக்கரித்துறை அமைச்சகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளித்து தற்சார்பு இந்தியாவின் நோக்கங்களை அடையும் வகையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நோக்கங்களை அடைவதற்காக கனரகத் தொழில்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், எஸ்சிசிஎல், என்எல்சிஐஎல், என்டிபிசி, டபிள்யுபிபிடிசிஎல், பிஇஎம்எல், கேட்டர் பில்லர், டாடா ஹிட்டாச்சி, கெவின்வெல் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்நிலைக்குழு உருவாக்கப்பட்டது. கனரக சுரங்கம் தோண்டும் இயந்திரம், நிலத்தடி சுரங்க உபகரணங்கள் ஆகியவற்றை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத்துக்களை தெரிவிப்பதற்காக தொழில்துறை சங்கங்கள் மற்றும் இதர தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் இக்குழு தமது வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. அதை நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் ஆய்வு செய்தார்.
இந்திய நிலக்கரி நிறுவனம் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான அதிக திறன் கொண்ட உபகரணங்களை இறக்குமதி செய்து வருகிறது. அதற்காக 1000 கோடி ரூபாயை சுங்க வரியாக செலுத்துகிறது.
******
AP/IR/RR/KPG
(Release ID: 1924190)