வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் இடையேயான புதிய வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை
प्रविष्टि तिथि:
15 MAY 2023 12:57PM by PIB Chennai
மத்திய வர்த்தகம், நுகர்வோர் நலன். உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ்கோயல், ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்தை எட்டியது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கத்தலைவர்கள் இடையேயான புதிய வர்த்தகம் மற்றும் நட்புறவு ஒப்பந்தம் (டிஇபிஎ) பிரேசிலின் பிரஸல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஐரோப்பிய நாடுகளான ஐஸ்லேண்ட், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். புதிய வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இணைய தளம் வாயிலாக நடத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்வரும் மாதங்களில் பல்வேறு ஆலோசனைகள் நடத்த பிரதிநிதிகள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.
******
AP/ES/RS/KGP
(रिलीज़ आईडी: 1924188)
आगंतुक पटल : 242