கலாசாரத்துறை அமைச்சகம்
ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் விவாதங்கள் புவனேஸ்வரில் தொடங்கியது
Posted On:
15 MAY 2023 1:26PM by PIB Chennai
ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் பிரதிநிதிகள் நிலையான விவாதங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோர் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு ஜி.கிஷன் ரெட்டி, உலகளாவிய கொள்கை திட்டமிடலில் கலாச்சாரம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். தற்போதைய சவால்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய நீடித்தத் தீர்வுகளை அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு ஜி20 கலாச்சாரப் பணிக்குழு உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும், பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வதிலும் இன்றியமையா பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறினார். கலாச்சாரம் தொடர்பான பேச்சுக்களை மேம்படுத்தவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்கவும், உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தாம் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய், நாடுகள் மற்றும் சமுதாயத்தினர் இடையே உறவை பராமரிப்பதிலும், புரிந்துணர்வை அதிகரிப்பதிலும், நிரந்தர எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கலாச்சாரம் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறினார்.
******
AP/IR/RR/KPG
(Release ID: 1924178)
Visitor Counter : 163