எரிசக்தி அமைச்சகம்
பசுமைப் பாதையில் செல்வதற்கான இலக்குகளை நிர்ணயிக்குமாறு தொழில்துறையினருக்கு திரு ஆர். கே. சிங், அறிவுறுத்தல்
Posted On:
13 MAY 2023 12:02PM by PIB Chennai
மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு. ஆர். கே. சிங், பசுமை ஆற்றல் குறித்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மெய்நிகர் வடிவில் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 500 பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 50 பேர் நேரில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் பசுமை திறந்த அணுகல் விதிகள் தொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. சிங், பசுமை நடவிடிக்கைகளை நோக்கிய இலக்குகளை நிர்ணயித்து, பசுமை ஆற்றல் திறந்த அணுகல் விதிகளைப் பயன்படுத்தி நியாயமான விலையில் பசுமை மின்சாரத்தைப் பெறவும், பசுமையான மற்றும் நிலையான சூழலுக்கு பங்களிக்கவும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். "பசுமை ஆற்றல் திறந்த அணுகல் விதிகள், 2022, இந்தியா பசுமையாக மாறுவதற்கான ஒரு முக்கிய படியாகும். 2030 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்ப உமிழ்வை 45% குறைக்கிறது. இது மின் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவும். நீங்கள் அனைவரும் புதிய விதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான கிரகத்தை விட்டுச் செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவும் நான் விரும்புகிறேன்,” என்று அமைச்சர் கூறினார்.
தொழிற்துறையால் பசுமை ஆற்றல் திறந்த அணுகல் விதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் ஒழுங்குமுறை, கொள்கை, வெளியேற்ற உள்கட்டமைப்பு, இணைப்பு, உள்ளிட்ட அனைத்து சாத்தியமான உதவிகளும் தொழில்துறைக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பசுமை ஆற்றல் திறந்த அணுகல் விதிமுறைகள், பசுமை எரிசக்தி உற்பத்தி, கொள்முதல், நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு அளவிலான நுகர்வோர் திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க சக்தியை வாங்க முடியும்.
மின்விநியோக நிறுவனங்களிடம் இருந்து, பசுமை மின்சாரத்தை வழங்குவதற்கு நுகர்வோருக்கு உரிமை உண்டு. தகுதியான நுகர்வோருக்கு பசுமை மின்சாரத்தை வழங்குவதற்கு நிறுவனம் கடமைப்பட்டிருக்கும்.
வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் தானாக முன்வந்து பசுமை மின்சாரத்தை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பசுமை மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு பசுமை சான்றிதழ் வழங்கப்படும்.
மின்சாரச் சட்டம் 2003 இன் படி, பசுமை மின்சாரத்துக்கான கட்டணம் பொருத்தமான ஆணையத்தால் தீர்மானிக்கப்படும்.
***
AD/PKV/DL
(Release ID: 1923884)