சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை (திவ்யங்ஜன்) 2023 மே 11 முதல் 17 வரை கவுகாத்தியில் திவ்ய கலா மேளாவை ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
10 MAY 2023 6:06PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (திவ்யங்ஜன்) நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் / கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனைக் காட்சிப்படுத்த, அசாமின் கவுகாத்தி நகரிலுள்ள மணிராம் திவான் வர்த்தக மையத்தில் 2023 மே 11 முதல் 17 வரை 'திவ்ய கலா மேளா' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கைவினைப் பொருட்கள் பார்வையாளர்களுக்கு ஒரு பரவசமான அனுபவத்தை வழங்கும்.
கிட்டதட்ட 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 மாற்றுத்திறானாளி கைவினைஞர்கள்/கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவர். இந்த 7 நாட்களும் காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்தக் கண்காட்சி, இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும். இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளையும் உண்டு மகிழலாம்.
இந்நிகழ்ச்சி மே 11-ம் தேதி மாலை 5.00 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும், 12 நகரங்களில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
----
AD/CR/KPG
(Release ID: 1923224)
Visitor Counter : 162