மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து மைகவ் ‘இளம் திறமையாளர்- ஓவிய திறமையை கண்டறிதல்’ நிகழ்ச்சியை நாளை நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
10 MAY 2023 6:20PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து மைகவ் ‘இளம் திறமையாளர்- ஓவிய திறமையை கண்டறிதல்’ நிகழ்ச்சியை வியாழக்கிழமை, மே 11 அன்று நடத்தவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது கலைத்திறன் தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு, ஓவியத்திறமையை கண்டறிதல் போட்டி தனித்துவ வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், துணிச்சல் மற்றும் தேசபக்தி, பொதுமக்களின் கதாநாயகர்கள் மற்றும் தலைவர்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரையலாம்.
இது குறித்து விவரங்களை https://innovateindia.mygov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
முதல் மூன்று வெற்றியாளர்கள் புதுதில்லியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படுவார்கள்.
முதல் பரிசை வெல்பவருக்கு 1 லட்சம் ரூபாயுடன், கோப்பையும், சான்றிதழும், 2-ம் பரிசை வெல்பவருக்கு ரூ. 75,000 ரொக்கமும் கோப்பையும், சான்றிதழும், 3-ம் பரிசை வெல்பவருக்கு ரூ.50,000 ரொக்கமும், கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 17 போட்டியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
***
AD/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1923203)
आगंतुक पटल : 210