அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஸ்வஸ்திக் முன்னெடுப்பின் கீழ் நீர் மற்றும் சுற்றுச்சூழல் துணைக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடு செய்தது
Posted On:
10 MAY 2023 2:06PM by PIB Chennai
இந்தியாவின் பாரம்பரிய அறிவை சமூகத்திற்கு தெரிவிப்பதற்கான தேசிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட தேசிய முன்னெடுப்பான ஸ்வஸ்திக்கின் (அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சமூக பாரம்பரிய அறிவு) ஒரு பகுதியாக, சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (NIScPR) நீர், சூழலியல் பற்றிய முதல் கூட்டத்தை நடத்தியது.
பேராசிரியர் பிரதீப் பி.முஜும்தார், டாக்டர் வீரேந்திர எம்.திவாரி, டாக்டர் எல்.எஸ் ரத்தோர், டாக்டர் மனோகர் சிங் ரத்தோர், பேராசிரியர் சரோஜ் கே.பாரிக், பேராசிரியர் அனில் பி.ஜோஷி, டாக்டர் புஷ்பேந்திர கே.சிங், டாக்டர் விஸ்வஜனனி ஜே.சத்திகேரி உள்ளிட்ட பிரபல நிபுணர்கள் இந்த துணைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஸ்வஸ்திக் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிபுணர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் இந்திய பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறைகளை ஆவணப்படுத்த மற்றும் பரப்புவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தனர். நீர், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கையின் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பத்ம பூஷன் விருது பெற்ற பேராசிரியர் அனில் ஜோஷி அறிவுறுத்தினார்.
பழங்கால நீர் பாதுகாப்பு முறைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு ஊக்குவித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பேராசிரியர் சரோஜ் கே.பாரிக், கருத்துரைத்தார். நீர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் நடைமுறைகளில் அறிவியல் அடிப்படையிலான இந்தியப் பாரம்பரிய அறிவைப் பரப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவாதத்துடன் துணைக் குழுக் கூட்டம் முடிவடைந்தது.
----
AD/CR/KPG
(Release ID: 1923164)