கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்ளூர் முதல் உலகளாவிய என்ற முன்னெடுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் பாண்டே

Posted On: 10 MAY 2023 1:31PM by PIB Chennai

கடந்த நிதியாண்டில் அதன் முந்தைய நிதியாண்டை விட 431 சதவீதம் அளவிற்கு அதிகளவில் ஏஒய்சிஎல் நிறுவனம் தேயிலை ஏற்றுமதி செய்ததற்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஏஒய்சிஎல்-ன் இச்சாதனை தேயிலை தொழில்துறையில் தரமான, புதுமை கண்டுபிடிப்புகளை உறுதிசெய்வதற்கான முன்னோட்டமாக உள்ளது என்று கூறினார்.

ஏஒய்சிஎல்-ன் இச்சாதனை பிரதமர் நரேந்தி்ர மோடியின் தொலைநோக்குப் பார்வையான சர்வதேச சந்தையில் இந்தியாவை மிகப்பெரிய நாடாக வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டதாக உள்ளது என்று தெரிவித்தார்.  உள்ளூர் முதல் உலகளாவிய என்ற முன்னெடுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இது நமக்கு உதவுவதாக கூறினார். ஏற்றுமதியை மேம்படுத்த அரசு பல்வேறு தி்ட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை அளித்து வருவதாக தெரிவித்தார்.

ஏஒய்சிஎல்-ன் இந்த வெற்றி உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேயிலை தொழில்துறை  வளர்ச்சியடைவதற்கும், விரிவடை வதற்கும் சிறந்த வாய்ப்பு இருப்பதை இது எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.  இந்தியாவில் தேயிலை தொழில்துறையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.  தேயிலை தோட்டங்கள் மூலம் ஊரக மலைப்பகுதிகளில் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஏஒய்சிஎல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு மேலும் பங்களிப்பு செய்வதிலும், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிக வேலைவாய்ப்புகளை அளிப்பதிலும் சந்தேகமில்லை என்று டாக்டர் மகேந்திரநாத் பாண்டே குறிப்பிட்டார்.

 

***

AD/IR/AG/KPG



(Release ID: 1923103) Visitor Counter : 145