பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எலி கோஹன் உடன் சந்திப்பு; இஸ்ரேல் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து பாதுகாப்புத் தளவாட உற்பத்தி செய்ய அழைப்பு


அதிநவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேல் விருப்பம்

Posted On: 09 MAY 2023 7:19PM by PIB Chennai

பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புது தில்லியில் இன்று இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எலி கோஹன் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது ராஜ்நாத் சிங் தற்சார்பு இந்தியா கொள்கை மூலம் உள்நாட்டுமயமாக்கல் முயற்சியில் இந்தியாவின் முன்னுரிமை பற்றி எடுத்துரைத்தார்.  இஸ்ரேல் நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் மேலும் இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர், ராஜநாத் சிங் விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, அதி நவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பமும் தெரிவித்தார். இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையேயான 30 ஆண்டுகால தூதரக உறவை அங்கீகரித்து இதனை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.



(Release ID: 1922914) Visitor Counter : 400


Read this release in: English , Urdu , Hindi , Marathi