இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாஸ்கோவில் நடைபெற்ற வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் பாராட்டு

प्रविष्टि तिथि: 09 MAY 2023 4:30PM by PIB Chennai

மாஸ்கோவில் நடைபெற்ற வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவர்களை  இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணைத்தலைமை இயக்குநர்கள் திருமதி ஏக்தா விஷ்னாய், திரு ஷிவ் சர்மா  ஆகியோர் பாராட்டினர். ரஷ்யாவில் இந்த மாதம் நடைபெற்ற இப்போட்டியில் இளம் சிறுமிகள் 17 பதக்கங்களை வென்றனர்.

இந்த சிறுமிகள் அனைவரும் ஓர் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியில் பங்கேற்றவர்கள் ஆவர். சேன்டா, தவ்லா ஆகிய பிரிவுகளில் ஜூனியர், சப் ஜூனியர் மற்றும் சீனியர் சிறுமிகள் 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

இது குறித்து அண்மையில் ட்விட்டரில் பதிவிட்ட மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.  கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டிகளின் பயன்களை நாடு பெற்றதாகவும், நமது சிறுமிகள் நம்மை பெருமையடைச் செய்ததை காணுவது சிறந்த தருணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த  பிரதமர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

வுஷூ போட்டியில் வலிமைமிக்க சீனா மற்றும் இந்தோனேஷிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளை வீழ்த்தி நமது சிறுமிகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

 

 

                                                                                                 ***

SM/IR/AG/KPG


(रिलीज़ आईडी: 1922905) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi