சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை "தக்ஷா" குனோ தேசிய பூங்காவில் இறந்தது

Posted On: 09 MAY 2023 6:26PM by PIB Chennai

தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்ட பெண் சிறுத்தை தக்ஷா 09.05.2023 அன்று காலை 10:45 மணியளவில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி, நண்பகல் 12.00 மணியளவில் சிறுத்தை பரிதாபமாக இறந்ததாக தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் சிறுத்தை உடலில் காணப்பட்ட காயங்கள், புணர்ச்சி முயற்சியின் போது, ஆண் சிறுத்தையுடன் ஏற்பட்ட வன்முறையான தொடர்பு காரணமாக ஏற்பட்டதாகத் தெரிகிறது. இனச்சேர்க்கையின் போது பெண் சிறுத்தைகளுக்கு எதிராக ஆண் சிறுத்தைகளின் இத்தகைய வன்முறை நடத்தைகள் இயல்பானவை என்று கூறப்படுகிறது.

இறந்த பெண் சிறுத்தையின் (தக்ஷா) பிரேத பரிசோதனை, நெறிமுறையின்படி கால்நடை மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

----- 

 

AD/PKV/KPG

 


(Release ID: 1922897)
Read this release in: English , Urdu , Hindi , Telugu