சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
“மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016”-ன் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து மாநில அரசுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் சந்திப்பு
Posted On:
09 MAY 2023 3:54PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையானது (DEPwD) அதன் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வாலின் வழிகாட்டுதலின் கீழ், “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016” மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் விதிகளை செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. அத்தகைய முயற்சிகளின் வரிசையில், இன்று திரு.ராஜேஷ் அகர்வால் தலைமையில் அனைத்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளரின் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல், மற்றவர்களுக்குச் சமமாக அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். டிடிஆர்எஸ், ஏஐசி, சிடிஇஐசி தொடர்பான திட்டங்களை முன்னிலைப்படுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இணைச் செயலாளர் திரு.ராஜீவ் சர்மா, இந்தத் திட்டங்களை களத்தில் வெற்றியடையச் செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நாட்டிலுள்ள மனநல மையங்கள், மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மாநிலங்களின் கடமைகள் குறித்த விவரங்களை நிகழ்நேரத்தில் பதிவேற்றம் செய்ய உருவாக்கப்பட்ட “மனோஆஷ்ரயா” தளம் குறித்து செஜல் பவார் குறிப்பிட்டார்.
பின்னர் மாநில குடியுரிமை ஆணையர்கள்/பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அவர்கள் பின்வரும் பரிந்துரைகளை முன் வைத்தனர்:-
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்க, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. கல்வி நிறுவனங்களில் மட்டும் இடஒதுக்கீடு போதுமானதாக இருக்காது. தொழிற்பயிற்சி, திறன் வளர்ப்பு போன்றவற்றில் தனியார் துறை பங்கெடுப்புகள் வேண்டும்.
தனியார் துறையின் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்
அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த, மாற்றுத்திறனாளிகள் குறித்த பிரத்யேக தரவுத் தளத்தை உருவாக்குவது அவசியம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு
பயனாளிகளை அடையாளம் காண கீழ்மட்ட பணியாளர்கள், ஆஷா பணியாளர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.
***
SM/CR/KPG
(Release ID: 1922875)