வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஸ்மார்ட் திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஆணையத்துடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து ஜேஐசிஏவுடன் கையெழுத்து

Posted On: 08 MAY 2023 3:58PM by PIB Chennai

ஸ்மார்ட் திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஆணையத்துடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து ஜேஐசிஏவுடன் கையெழுத்திட்டுள்ளது.  மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் இயக்கப்படும் நிலையங்களில் மேம்பாட்டு  பணிக்காக ஸ்மார்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களின் பொருளாதார நடவடிக்கைகளையும், சம்பந்தப்பட்டவர்களின் வசதியை மேம்படுத்தவும் இது வகை செய்யப்பட்டுள்ளது.  மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் உள்ள 12 ரயில் நிலையங்களில் குஜராத்தில் சபர்மதி, சூரத் ரயில் நிலையங்களுக்காகவும், மகாராஷ்டிராவில் விரார், தானே ரயில் நிலையங்களுக்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டுள்ளது.

தில்லி, அகமதாபாத், மும்பையில் ஸ்மார்ட் திட்டத்திற்காக தொடர் கருத்தரங்குகள் மற்றும் கள ஆய்வுகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் குஜராத், மகாராஷ்டிரா அரசுகள், ஜேஐசிஏ ஏற்பாடு செய்துள்ளது. இதன் முதல் கருத்தரங்கம் புதுதில்லி நிர்மான் பவனில் மே 8, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜப்பான் தூதரகம், ஜேஐசிஏ தலைமையகம், ஜேஐசிஏ இந்திய அலுவலகம், ஜேஐசிஏ நிபுணர்கள் குழு, ரயில்வே அமைச்சகம், தேசிய அதிவேக ரயில் கழக நிறுவனம், மத்திய வீட்டுவசதி மற்றும் நுகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், டிசிபிஓ ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

***

AP/IR/AG/KPG



(Release ID: 1922559) Visitor Counter : 132