வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்த காலத்தில் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை நிகரற்ற முத்திரையைப் பதிக்கும் : திரு பியூஷ் கோயல்

Posted On: 04 MAY 2023 7:16PM by PIB Chennai

அமிர்த காலத்தில்,  இந்தியாவின் ஊடகங்களும் பொழுதுபோக்குத் துறையும் நிகரற்ற அடையாளத்தை உருவாக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

FICCI ஃபிரேம்ஸ் 2023 இல் அவர் ஆற்றிய உரையில், இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான  உறுதிப்பாட்டை  பாராட்டினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உள்ள அரசு, உலகளவில் துறையின் எல்லைகளை விரிவுபடுத்தவும், உலகின் தொலைதூர மூலைகளை அடையவும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாக அமைச்சர் கூறினார். 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் உள்ளது என்ற செய்தியை ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையால் உலகிற்குப் பரப்ப முடியும் என்று கோயல் கூறினார். இணையற்ற திறமையுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என்றும் கூறினார்.

நவீன தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தியதற்காக தொழில்துறையினரைப் பாராட்டிய அமைச்சர், ஸ்மார்ட்ஃபோன்களை கேமராக்களாகப் பரவலாகப் பயன்படுத்துவதை உதாரணமாகக் குறிப்பிட்டார். டிஜிட்டல் தளங்களின் தோற்றத்துடன் ஊடகங்களும் பொழுதுபோக்குத் துறையும் வேகமாக வளரும் என்று திரு கோயல் கூறினார். அவதார் போன்ற ஹாலிவுட் படங்களில் ஈடுபட்டுள்ள இந்திய விஎப்எக்ஸ் நிறுவனங்களை திரு பியூஷ் கோயல் பாராட்டினார். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட்-அப்கள் கணிசமான பங்களிப்பை அளித்து வருகின்றன என்றார் அவர்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை இன்றைய புதிய இந்தியாவை உலகிற்குக் காட்டவும், பொருளாதாரத்தை உயர்த்தவும், புதிய பார்வையாளர்களை நாடு அடைய உதவவும், நேர்மறையான கருத்துக்களைப் பரப்பவும் முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகங்களும் பொழுதுபோக்குத் துறையும் இந்தியாவின் கலாசாரத் தூதர்கள் என்றும், இந்தியாவுக்கே தனித்துவ அடையாளத்தைக் கொடுத்திருப்பதாகவும் திரு கோயல் குறிப்பிட்டார்.  உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நிலைமைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் வழிவகுக்கும் மக்கள், வணிகங்கள் மற்றும் நாடுகளை இணைக்க ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஒரு பெரிய ஆற்றல் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

-----

AD/PKV/KPG



(Release ID: 1922056) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Marathi , Hindi