கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள சிட்வே துறைமுகத்தின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் வகையில், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து MV-ITT LION (V-273) ஐ திரு.சாந்தனு தாக்கூர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
Posted On:
04 MAY 2023 3:45PM by PIB Chennai
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள சிட்வே துறைமுகத்தை செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் வகையில், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து MV-ITT LION (V-273) கப்பலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் திரு.சாந்தனு தாக்கூர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் மானிய உதவியுடன் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), திட்ட மேம்பாட்டு ஆலோசகராக செயல்பட்டு தனது பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
MV-ITT LION (V-273) 1,000 மெட்ரிக் டன் சிமெண்ட் கொண்ட 20,000 மூட்டைகளை ஏற்றிக் கொண்டு 2023 மே 9-ம் தேதியன்று சிட்வே துறைமுகத்தை சென்றடையும்.
மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தையும், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தையும் இணைக்கும் கலடன் ஆற்றின் மீது பல அடுக்கு போக்குவரத்து வசதியை நிர்மாணிப்பதற்கும், இயக்குவதற்கும் இந்தியா- மியான்மர் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சிட்வே துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகமானது மியான்மரில் உள்ள பலேத்வாவை உள்நாட்டு நீர்வழி வழியாகவும், இத் திட்டத்தின் ஒரு பகுதியாக பலேத்வாவிலிருந்து மிசோரமில் உள்ள சோரின்புய் வரை சாலை வழியாகவும் இணைக்கிறது.
இந்த துறைமுகமானது மியான்மரில் இருந்து மற்றும் குறிப்பாக ரக்கைன் மாநிலத்திலிருந்து இந்தியாவிற்கு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான புதிய வாய்ப்புகளைத் தொடங்கி வைத்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும்.
***
AD/CR/KPG
(Release ID: 1921979)
Visitor Counter : 131