குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புத்த பூர்ணிமா தினத்தையொட்டி குடியரசுத் துணைத்தலைவரின் வாழ்த்து

प्रविष्टि तिथि: 04 MAY 2023 4:02PM by PIB Chennai

புத்த பூர்ணிமா தினத்தையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத்தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“புத்த பூர்ணிமாவின் சிறந்த தருணத்தில் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்த பூர்ணிமா என்பது கௌதம புத்தரின் ஆழ்ந்த போதனைகளை பிரதிபலிக்கக் கூடிய நாளாகும்.  அவர் சிந்தனையிலும், செயலிலும் மனிதகுலத்தை உன்னதமாக வழிநடத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் அமைதி பற்றிய அவரது செய்தி பல நூற்றாண்டுகளாக எதிரொலித்தது, எல்லாவற்றிற்கும் மேலாக, கருணை மற்றும் நல்லிணக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்க தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.

இந்த சிறந்த தருணத்தில், புத்தபெருமானின் தம்மத்தின் கொள்கைகளுக்கு மீண்டும் நம்மை நாம் அர்ப்பணிப்போம், மேலும் அனைத்து உயிர்களிடத்திலும் இரக்கம் மற்றும் அன்பு நற்பண்புகளை ஏற்படுத்த முயற்சிப்போம்.

***

AD/IR/RJ/KPG


(रिलीज़ आईडी: 1921961) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi