கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சாரத்துறை அமைச்சகம் வைசக் பூர்ணிமா தினத்தை மே 5-ம் தேதி அன்று சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டாட உள்ளது
Posted On:
04 MAY 2023 1:47PM by PIB Chennai
வைசக் பூர்ணிமா தினத்தை மே 5-ம் தேதி அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிமாலயா புத்த மத சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சாரத்துறை அமைச்சகம் கொண்டாட உள்ளது.
லே பகுதியில் உள்ள போலோ மைதானத்தில் லடாக் புத்த மத சங்கம் மற்றும் லடாக் கோன்பா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில், மத்திய புத்த மதக் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
காலை 7 மணிக்கு புத்த ஜெயந்தி சமரா நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து டிஹெச்ஐஹெச் ஆராய்ச்சி இதழின் 63-வது பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் நாலாந்தாவில் உள்ள புத்தர் கோயிலில் பாரம்பரிய பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து புத்த மதம் மற்றும் பீகார் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அருணாச்சலப்பிரதேசம், தாகூங் பகுதியில் உள்ள மத்திய ஹிமாலயா கலாச்சாரக் கல்வி நிலையம் ஏற்பாடு செய்துள்ள பேச்சுப் போட்டி நடைபெறுகிறது, பூஜையும் நடைபெற உள்ளது.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1921950)