தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை உலக அரங்கை அடையும் வகையில் ஊக்குவித்து ஆதரவளிக்க அரசு விரும்புகிறது
Posted On:
03 MAY 2023 4:27PM by PIB Chennai
"உலக அரங்கை அடையும் வகையில், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையை ஊக்குவித்து, ஆதரவளிக்க அரசு விரும்புகிறது" என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா கூறியுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற 23வது FICCI FRAMES நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றினார். பொழுதுபோக்கு வணிகத்திற்கான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் உறுதியான வருடாந்திர உலகளாவிய மாநாட்டில் ஒன்றான FICCI FRAMES இன் 23வது மாநாடு இன்று முதல் 5ந்தேதி வரை மும்பையில் உள்ள போவாயில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்துறையின் முன் இருக்கும் மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை சமாளிப்பது குறித்து விளக்கினார். “தொழில்துறையில் அதிக மனிதவளம் வரும் வகையில் மேலும் மேலும் நிறுவனங்களை அமைக்க தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் குறித்து பேசிய செயலாளர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மீட்டெடுப்பதற்கு நிதியளிக்கும் திட்டத்தை அரசு விரைவில் தொடங்கும் என்று கூறினார். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இதில் 1400 திரைப்படங்கள் மற்றும் 1100 குறும்படங்கள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய கொள்கை முடிவுகள் திரைப்படத் திருட்டைத் தடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த செயலாளர், “திருட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சினிமாட்டோகிராஃப் சட்டத்தை மாற்றியமைக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் திருட்டுத்தனமாக படங்களைக் காட்டும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நேரடி அதிகாரம் கிடைக்கும்’’, என்று கூறினார்.
திரு அபூர்வ சந்திரா, FICCI- EY மீடியா மற்றும் பொழுதுபோக்கு அறிக்கையை வெளியிட்டார். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாள் FICCI பிரேம்ஸ் மாநாடு தனிநபர்கள், நாடுகள் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு இடையே கருத்துக்கள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்ள ஒரு இணையற்ற தளமாக இருக்கும். மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் குழு விவாதங்கள், மாநாடுகள், கண்காட்சிகள், ஃபயர்சைட் அரட்டைகள், மாஸ்டர் கிளாஸ்கள் மற்றும் பட்டறைகள், திரைப்படம், தொலைக்காட்சி, அனிமேஷன், கேமிங், இசை மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் மீடியா & பொழுதுபோக்குத் துறையின் பிற துணைத் துறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. விரிவான அட்டவணையை இங்கே காணவும் - https://www.ficci-frames.com/assets/download/FICCIFRAMES2023-Programme.pdf
-------
AD/PKV/KPG
(Release ID: 1921802)
Visitor Counter : 163