குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மணிப்பூர் தனமஞ்சூரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
03 MAY 2023 5:55PM by PIB Chennai
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், எனது அன்பான மாணவர்களே, உங்களுடன் இணைவதற்கு நான் இங்கு வந்துள்ளேன். மணிப்பூர் என்ற பெயரில், மணி என்பது 'நகை', பூர் என்பது 'நிலம்'.
வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி, 'கிழக்கைப் பார், கிழக்கே செயல்படு'. எனும் பரிமாணத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இப்போது இந்தக் கொள்கை 'கிழக்கைப் பார், கிழக்கே செயல்படு' என்பது இந்த நாட்டில் மட்டும் அல்ல. இது இந்த நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் செல்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மக்கள் தொகை சிறியதாக இருந்தாலும், மாநிலத்தின் செல்வம் அதன் கலாச்சாரத்தில் பிரதிபலிக்கிறது. வடகிழக்கு மிக வேகமாக மாறி வருகிறது. 9 விமான நிலையங்களில் இருந்து 17 விமான நிலையங்களாக அதிகரித்துள்ளது. ரயில் இணைப்பு, விமான இணைப்பு ஆகியவற்றைப் பாருங்கள். இந்த விமான நிலையத்தைப் பாருங்கள், இது தேசிய மற்றும் சர்வதேச இணைப்பைக் கொண்டுள்ளது; ஒரு வளர்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் இந்தப் பகுதி 100% டிஜிட்டல் மயமாக்கப்படும்.
நீங்கள் பல்வேறு பன்முகத்தன்மை, ஆழமான கலாச்சாரம், உங்கள் கலை, நடனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் மணிப்பூர் போலோவின் தாயகமாக இருந்ததை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகெங்கிலும் உள்ள பலரை இணைக்கும் போலோ மணிப்பூரைச் சேர்ந்தது.
வடகிழக்கு அதன் இளைஞர் சக்தி, விளையாட்டு மற்றும் தடகளத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் இந்தப் பகுதியில் மனித வளத்தின் மாபெரும் வெற்றியாகும்.
வடகிழக்கு புதிய இடமாக இருக்கப்போகிறது. இது ஏற்கனவே சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது. கல்வி, சுகாதாரம், இணைப்பு மற்றும் ரயில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நாட்டில் நடக்கும் அனைத்தும் களத்தில் பிரதிபலிக்கின்றன.
நாம் அமிர்த காலத்தில் இருக்கிறோம்- நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், ஆனால் 2047 ஆம் ஆண்டு குறித்து நோக்குகிறோம். இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். நீங்கள் அனைவரும் சுற்றி இருப்பீர்கள்; நீங்கள் உங்கள் தோள் வலிமையால் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் வீரர்கள்; 2047ல் இந்தியாவை உலகின் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் போர்வீரர்கள் நீங்கள். ஏனெனில், தாங்கள் விரும்பும் எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்குவதற்கான திறமையைப் பெறுவதற்கு உயர்கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் இப்போது உள்ளன.
எனவே, மாணவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், கனவு காணுங்கள் ஆனால் அந்தக் கனவை வெறும் கனவாக விடாதீர்கள். உங்கள் கனவு சில அடிப்படை யதார்த்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் அணுகுமுறை, திறமை மற்றும் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை எப்போதும் நம்புங்கள்.
தேசிய கல்விக் கொள்கை ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது இளைஞர்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முடியாத ஒரு அமைப்பிற்குள் நுழைந்த அனைத்தையும் இது மாற்றியுள்ளது. இது ஒரு பெரிய மாற்றம், இந்தக் கல்விக் கொள்கை அரசியல் கொள்கை அல்ல. இது அரசின் கொள்கையல்ல; அது ஒரு தேசியக் கொள்கை. இந்தக் கொள்கையின் பரிணாமம் ஒரே ஒரு கருப்பொருளைக் கொண்டுள்ளது, அதாவது. உங்களுக்குக் கிடைக்கும் அனைத்துத் திறனையும், திறமையையும் முழுமையாகப் பயன்படுத்த மாணவர்களை அனுமதிக்கும்.
உதாரணமாக முத்ரா கடனை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மிடம் ஏராளமான தொழில்முனைவோர் உள்ளனர். முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட கடன் தொகை ஒரு சிறந்த வாய்ப்பு. இன்னும் கொஞ்சம் மேலே சென்றால், விவசாயிகளுக்கு பலம் தரும் இந்திய அரசின் திட்டத்தின் மூலம் இதுவரை விநியோகம் செய்யப்பட்ட தொகை 2.25 லட்சம் கோடி.
மீண்டும் ஒருமுறை நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். வரலாறு படைக்கும் முன் பலமுறை வீழ்ந்தவர்களால் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்கள், அதைச் செய்யும் திறன் உங்களிடம் உள்ளது.
வாழ்த்துகள், நன்றி.
***
AD/PKV/KPG
(Release ID: 1921795)