நிலக்கரி அமைச்சகம்
2023 -24-ம் ஆண்டின் நிலக்கரி அமைச்சக செயல் திட்டத்தில் 1,012 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்
Posted On:
03 MAY 2023 2:58PM by PIB Chennai
நிலக்கரித் துறையில் உற்பத்தி, செயல்திறன், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான இலக்குடன் 2023-24 நிதியாண்டுக்கான செயல் திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதில், கீழ் காணப்படும் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
1. நிலக்கரி பகுப்பாய்வு:
நிலக்கரி உற்பத்தி - 2023-24 நிதியாண்டுக்கான மொத்த நிலக்கரி உற்பத்தி இலக்கை 1,012 மெட்ரிக் டன்னாக அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
சுரங்கங்களின் அவுட்சோர்சிங் - உற்பத்தி நிறுத்தப்பட்ட/கைவிடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிலக்கரியின் தரம் - நிலக்கரி அமைச்சகமும், நிலக்கரி நிறுவனங்களும் அனைத்து நுகர்வோருக்கும் தரமான நிலக்கரியை வழங்குவதற்கான நோக்கத்தை அடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
2. தனியார் முதலீடு:
வணிகச் சுரங்கம் - 2022-23-ம் நிதியாண்டின் போது, மொத்தம் 23 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்களில் அமைச்சகம் கையெழுத்திட்டது. இந்த சுரங்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 44,906 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது சுற்று வணிக ஏலத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023-24- நிதியாண்டில் 25 நிலக்கரி சுரங்கங்கள் வணிக சுரங்கத்திற்காக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. உள்கட்டமைப்பு திட்டங்கள்
பிரதமர் விரைவு சக்தி தேசிய திட்டம் - ரயில்வே அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, நிலக்கரி வெளியேற்றத்திற்கு முக்கியமான புதிய ரயில் பாதை திட்டங்களை நிலக்கரி அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
4. சுரங்கங்களில் பாதுகாப்பு
நிலக்கரி அமைச்சகம், நிலக்கரிச் சுரங்கங்களில் பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பிபிஇ பயன்பாடு போன்றவற்றால் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
5. நிலக்கரித்துறையில் தொழில்நுட்பத்திற்கான உந்துதல்:
நிலக்கரித் துறையில் தொழில்நுட்பத் திட்டங்கள் - நிலக்கரித் துறையில் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த (ட்ரோன், ரிமோட் சென்சிங்) திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கரி முதல் இரசாயனம் வரை - சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்தை அடைய நிலக்கரி அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
6. நிலக்கரித் துறையில் நிலைத்தன்மை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளங்களின் பாதுகாப்பு, சமூக அக்கறை மற்றும் காடுகளையும், பல்லுயிர்ச்சூழலையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுடன் நிலக்கரி உற்பத்தியை மேற்கொள்ளும் நிலையான வளர்ச்சி மாதிரியை ஊக்குவிக்க நிலக்கரி அமைச்சகம் கருதுகிறது.
***
AD/CR/KPG
(Release ID: 1921687)
Visitor Counter : 231