குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

திப்ருகர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 03 MAY 2023 3:10PM by PIB Chennai

வணக்கம், அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

எனதருமை மாணவர்களே, அமிர்த காலத்தில்  இந்தியாவை 2047-ம் ஆண்டுக்கு எடுத்து செல்வதற்கான மனிதவள  ஆதாரமாக நீங்கள் திகழ்கிறீர்கள். நாடு 2047-ம் ஆண்டு நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நீங்கள் செயல்வீரர்களாக இருப்பீர்கள். இந்த பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் 21-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இங்கு நான் 3-வது முறையாக வருகை தருகிறேன். இது எனக்கு என்றும் மகிழ்ச்சியான தருணம்.

வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள  8 மாநிலங்களும் உண்மையில் இந்தியாவின் அஷ்டலட்சுமிகளாகும்.  அவர்களுடைய பங்களிப்பு இன்றி இந்தியா முழுமையடையாது.

திப்ருகர்-அசாம் மாநிலத்தில் அழகான கலாச்சாரம் மிக்க வர்த்தக தலைநகரமாகும். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவையில் எனது சகாவுமான திரு ரஞ்சன் கோகாய் உள்பட பல்வேறு அறிஞர்கள், இலக்கியவாதிகள், கலாச்சாரத் துறையினர் ஆகியோருக்கு திப்ருகர் சொந்த ஊராகும்.

இந்த ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த திருமதி ஹிமோப்ரோவா சுட்டியா, திரு ஹேம்சந்திர கோஸ்வாமி, திரு ராம்கி வாங்பே ஜீன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

                                                  -----

AD/IR/AG/KPG



(Release ID: 1921684) Visitor Counter : 157