நித்தி ஆயோக்
ஸ்டார்ட்அப் 20, அடல் புத்தாக்க இயக்கம், காப்புரிமை தலைமை கட்டுப்பாட்டாளர், வடிவங்கள், வர்த்தக குறியீடு மற்றும் பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை உபாஜ் என்ற கலைகளின் புதுமைக் கண்டுபிடிப்புகள் திருவிழாவைத் தொடங்கியது
Posted On:
03 MAY 2023 11:49AM by PIB Chennai
உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தையொட்டி, உபாஜ் என்ற கலைகளின் புதுமைக்கண்டுபிடிப்புகள் திருவிழா புதுதில்லியில் உள்ள நித்தி ஆயோக்கில் ஏப்ரல் 26, 2023 அன்று தொடங்கியது. காப்புரிமைகள் தலைமை கட்டுப்பாட்டாளர், வடிவங்கள் மற்றும் வர்த்தக குறியீடுகள் ஏற்பாடு செய்த உலக அறிவுசார் தின கொண்டாட்டத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரே நேரத்தில் நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம், கலைச் செயல்பாடுகளில் புதுமை கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் குறித்த குழு விவாதத்தை நடத்தியது. கலைஞர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், அறிவுசார் சொத்துரிமை நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.
***
AP/IR/AG/KPG
(Release ID: 1921619)
Visitor Counter : 191