உள்துறை அமைச்சகம்

2வது ஜி-20 பேரிடர் தணிப்பு பணிக்குழு கூட்டம் வரும் 23 முதல் 25 வரை மும்பையில் நடைபெறவுள்ளது

Posted On: 02 MAY 2023 7:06PM by PIB Chennai

ஜி-20 பேரிடர் தணிப்பு பணிக்குழுவின் 2வது கூட்டம் மும்பையில் வரும்  23 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று, பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர்  இக்பால் சிங் சாஹல் மும்பையில் உள்ள பிஎம்சி தலைமையகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி ஆய்வு செய்தார்.

பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன ஜி-20 கவுன்சிலின் பேரிடர்  அபாயத் தணிப்பு பணிக்குழுவின் திட்டமிடப்பட்ட கூட்டம் இந்த சாதனையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாகும். இதை மனதில் வைத்து, பிருஹன்மும்பை மாநகராட்சி  உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் சரியான ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

வரும் 23ந்தேதி தொடங்கவுள்ள 2வது ஜி-20 பேரிடர் தணிப்பு  பணிக்குழு கூட்டத்தில்  120க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். இந்த சந்திப்பின் ஒருபுறம், பணிக்குழுவின் பிரதிநிதிகள் பிருஹன்மும்பை மாநகராட்சி  தலைமையகத்திற்கும் வருவார்கள் இதைக் கருத்தில் கொண்டு, பிஎம்சி தலைமையக கட்டடத்தில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று ஆணையர் வலியுறுத்தினார்.

ஜி-20 கவுன்சிலின் மொத்தம் மூன்று பணிக்குழுக் கூட்டங்கள் மே மாதம் மும்பையில் நடைபெறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, சாலைகள், சுகாதாரம், அழகுபடுத்துதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் முடிக்க வேண்டும் என்று பிஎம்சி ஆணையர் கேட்டுக் கொண்டார். ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரத்தில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

*** 

AD/PKV/KPG



(Release ID: 1921484) Visitor Counter : 177